Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

குறைந்திடிலுந் தன்தருமங் குற்றமில் மேலா(ம்)
நிறைந்தியலு மற்றையதி னேரே – மறைந்திறந்து
தனதருமத் தைச்செயினுந் தானன்று வேறான
வன்தருமத் தச்சம் வரும்.     3.28

குறைந்திடிலும்

(அங்கங்களில்) குறைவோடு அனுஷ்டிக்கப்பட்டாலும்

தன் தருமம்

(ப்ரக்ருதியோடு கூடியவனுக்கு) இயற்கையில் உரியதாயிருக்கும் உபாயமான கர்மயோகம்.

குற்றம் இல்

குற்றமற்றது

நிறைந்து இயலும் மற்றையதில்

(அங்கங்களில்) குறைவற விளங்கும் பிறர்க்குரிய உபாயமான ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும்

நேரே மேலாம்

நேரே சிறந்ததாகவும் விளங்குகிறது

மறைந்து இறந்து தன் தருமத்தை செயினும் தான்

தனக்குரிய உபாயமான கர்மயோகத்தைச் செய்து (இந்த ஜன்மத்தில் பலனையடையாமல்) மரணமடைந்து மறைந்துபோனாலும்

நன்று

அது நல்லது

வேறான

தனக்குரியதல்லாததாய், வன் செய்யவரியதான, தருமத்து

அச்சம் வரும்

(தவறு ஏற்பட்டு அழிந்துபோகையாகிற) பயம் ஏற்படும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top