Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அண்ணலவன் கேட்க வதனியல்க ளங்குரைத்தா
ணெண்ணமருஞ் சாங்கியருக் கின்னிறிவு – வண்ணநிகழ்
சீருடைய யோகியர்க்குச் செய்கரும மென்றிரண்டும்
பேருலகிற் சொன்னேன பிரித்து.    3.2

அவன் கேட்க

அவ்வர்ஜுனன் இப்படிக்கேட்க

அண்ணல

ஸ்வாமியான கண்ணன்

அதன் இயல்கள்

ஜ்ஞான கர்மங்களின் தன்மைகளை

அங்கு

அவ்விடத்தில்

உரைத்தான்

அருளிச்செய்தான்

பேர் உலகில்

(பலவித அதிகாரிகளையுடைய) பெரிய உலகில்

எண் அமரும் சாங்கியருக்கு

(ஆத்மாவிலேயே) தங்கள் அறிவு பொருந்தப் பெற்ற ஞானயோகிகளுக்கு

இன் அறிவு

இனிய ஞானயோகமும்

வண்ணம் நிகழ் சீர் உடைய யோகியர்க்கு

ரூபம் முதலிய விஷயங்களிலே ஈடுபடும் இயல்பையுடைய கர்மயோகிகளுக்கு

செய் கருமம்

கிரியா ரூபமான கர்ம யோகமும்

என்று இரண்டும்

என்று இவ்விரண்டையும்

பிரித்து சொன்னேன்

(அதிகாரிகளுக்குத் தக்கபடி) வெவ்வேறாகவே சொன்னேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top