Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நாதா கருமத்தி னன்றாகிற் புத்தியெனை
யேதாக விக்கருமத் தேவுதி – சூதார்ந்த
வுன்னுரையென் னுண்மயக்கு மொன்றுரையென் னன்றியெனத்
தன்னுரைசெய் தான்விசயன்றான்.     3.1

நாதா

ஸ்வாமியே

கருமத்தில்

கர்மயோகத்தைக் காட்டிலும்

புத்தி

ஞானயோகம்

நன்று ஆகில்

சிறந்தது என்றால்

எனை

என்னை

இக்கருமத்து

கொடியதான இக் கருமத்தில்

ஏதாக ஏவுதி

எதற்காக ஏவுகிறாய்

சூது ஆர்ந்த

வஞ்சனை நிறைந்ததுபோல் தோன்றும்

உன் உரை

உன் வாக்கியம்

என் உள் மயக்கும்

என் அறிவை மயக்கும்

என் நன்றி ஒன்று

எனக்கு நல்லதை அடைவிக்கும் முரண் படாத ஒரே வாக்கியத்தை

உரை

சொல்லுவாய்

என

என்று

விசயன் தான்

அர்ஜுனன்தான்

தன உரை செய்தான்

தன் நெஞ்சில் சரியெனப்பட்ட வார்த்தையைச் சொன்னான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top