Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

சாங்கியத்தின் தன்மையின்மேற் புந்தித் தகவுரைத்தே
னீங்குகன்ம யோகத் தியல்பிலிதன் – பாங்கியம்பக்
கேளாயிப் புத்தியினைக் கிட்டவினைக் கட்டினைநீ
மூளாம னிற்றி முயன்று.          2.36

சாங்கியத்தின் தன்மையின் மேல்

ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி

புந்தி தகவு உரைத்தேன்

அறியவேண்டிய தன் பெருமையை உரைத்தேன்

ஈங்கு

இனி

கன்மயோகத்து இயல்பில்

கர்மயோகஸ்வரூபத்தில்

இதன் பாங்கு

(அறிய வேண்டிய) புத்தியின் பெருமையை

இயம்ப கேளாய்

நான் சொல்லக் கேளாய்

இப்புத்தியினை முயன்று கிட்ட

இந்த புத்தியை முயற்சிசெய்து அடைந்தாயாகில்

வினைக்கட்டினை

கர்மங்களால் ஏற்படும் ஸம்ஸாரபந்தத்தை

நீ மூளாமல் நிற்றி

நீ அடையமாட்டாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top