Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இரண்டாமத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம் 

ஆய னருள்கீதை யாய்ந்தவிரண் டாமோத்தின்  
மேய வுயிர்நிலைமை மெய்ம்முடிவு – தூய்மனத்தர்
ஆன்றதுணி வாற்ற லமைந்தா ரமர்பொருள்க
ளென்றவகை தான்முடிந்த தீங்கு.     2.64A

ஆயன்

கண்ணன்

அருள்

அருளிய

கீதை

கீதையின்

ஆய்ந்த

ஆராய்ச்சிமிக்க

ஈங்கு இரண்டாம் ஓத்தில்

இந்த இரண்டாமத்தியாயத்தில்

மேய உயிர் நிலைமை மெய் முடிவு

நித்யமான ஆத்மாவின் நிலையைப்பற்றிய உண்மையான நிச்சயரூபமான அறிவென்ன

தூய் மனத்தர்

(பலன்களில் பற்றற்றிருக்கையாலே) பரிசுத்தமான மனத்தையுடையவர்களாய்

ஆன்ற துணிவு

(முற்கூறிய) ஆத்ம தத்வ நிச்சயத்தையும்

ஆற்றல்

கர்மங்களை அனுஷ்டிக்கும் திறமையையும்

அமைந்தார்

பெற்றிருப்பவர்கள்

அமர் பொருள்கள்

அடையும் பலன்களான ஞானயோக மென்ன ஆத்மஸாக்ஷாத்காரமென்ன

என்ற வகை தான்

ஆகிய விஷயங்கள்

முடிந்தது

விளக்கிமுடிக்கப்பெற்றன

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top