Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஏதறியோஞ் சீரிதென யாம்வெல் லவுமாகு
மீதவர்கள் வெல்லவுமாம் வேறில்லை – பூதலத்தில்
யாவரை நாங் கொன்றா லிராதே முடிகின்றோ
மாவரிவர் போர்முன் னமர்ந்து.   2.6

யாம் வெல்லவும் ஆகும்

(இப்போரில்) நாம் ஜயித்தாலும் ஜயிக்கலாம்

அவர்கள் மீது வெல்லவும்

ஆம் அவர்கள் எங்களை ஜயித்தாலும் ஜயிக்கலாம்

வேறில்லை

(இவ்விரண்டு நிலையைத்தவிர) வேறு நிலையில்லை

ஏது சீரிது என

பிச்சையெடுத்து அழிந்தொழிவது நல்லதே

அறியோம்

நாம் அறியமாட்டோம்

பூதலத்தில்

இவ்வுலகில்

நாம்

நாங்கள்

யாவரை கொன்றால் இராதே முடிகின்றோம்

எவர்களைக் கொன்றுவிட்டு உயிர்தரியாமல் (நாமும்) அழிந்து விடுவோமோ

இவர்

அப்படிப்பட்ட இந்த துரியோதனாதியர்

போர் முன் அமர்ந்து ஆவர்

(நம்மோடு சண்டைசெய்ய) யுத்தகளத்தின் முன்னிலையிலே பொருந்தி நிற்கின்றனர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top