Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உகப்புவெறுப் பற்றுத்தன் னுள்ளாற் பொருள்க 
ளகத்துவச மாம்புலனா லார்ந்தோன் – மிகத்தெளிவு
சேரு மதிற்றுயருந் தீருந் தெளிநெஞ்சி
லாரு நிலைப்புந்தி யாசு.      2.58

உகப்புவெறுப்பு அற்று

ராகத்வேஷங்களில்லாமல்

அகத்து வசமாம் புலனால்

தனக்கு வசப்பட்டிருக்கும் இந்திரியங்களாலே

பொருள்கள் ஆர்ந்தோன்

விஷயங்களைக் கடந்தவனாய்

தன் உள்ளான்

தன் நெஞ்சை அடக்கியவனான புருஷன்

மிகத்தெளிவு சேரும்

மிகவும் மனத்தெளிவை அடைவான்

அதில்

அந்த மனத்தெளிவாலே

துயரம் தீரும்

எல்லாத் துன்பங்களும் அழியும்

தெளிநெஞ்சில்

தெளிந்த நெஞ்சினாலே

ஆசு

விரைவில்

புந்தி

அறிவு

 நிலை ஆரும்

 நிலைநிற்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top