Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அங்கங்க ளாமை யகத்தடக்கு மாறுபோ
லிங்கைம் பொறிக ளியல்பனைத்தும் – பொங்கைம்
புலனின் றகத்தடக்கும் போதத் தனக்கு
வலனின்ற வேற்குமே வந்து.         2.54

ஆமை

ஆமையானது

அங்கங்கள்

தன் அவயவங்களை

அகத்து

உள்ளே

அடக்கும் ஆறு போல்

இழுத்துக் கொள்வதுபோலே

இங்கு

இவ்வுலகில்

ஐம்பொறிகள் இயல்பு அனைத்தும்

ஐந்து இந்திரியங்களின் தொழில்கள் எல்லாவற்றையும்

பொங்கு ஐம் புலனின்று

(என்னைக்கொள் என்னைக் கொள் என்று) பொங்கிவரும் ஐந்து சப்தாதி விஷயங்களிலிருந்து இழுத்த

அகத்து அடக்கும் போது

மனத்தை ஆத்மாவில் ஈடுபடுத்தும்போது

அத்தனக்கு

அந்த யோகிக்கு

வலன் வந்து நின்ற ஏற்குமே

அறிவு உண்டாகி நிலைநின்றதாகும். (அவனும் ஸ்தித2ப்ரஜ்ஞனே யென்றபடி.)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top