Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எங்கு மருவுநசை யேது மறத்துறந்து
தங்கு நலந்தீங்கு தானணைந்தே – யங்கங்கு
முந்து முகப்பு முதிர்வெறுப்பு மற்றார்க்கு
வந்து நிலையா மதி.         2.53

எங்கும் மருவும் நசை ஏதும்

(இனிய பொருள்கள்) எல்லாவற்றிலும் உண்டாகும் எந்த ஈடுபாட்டையும்

அற துறந்து

நன்கு கைவிட்டு

தங்கும் நலம் தீங்குதான் அணைந்தே

நிலைநிற்கும் நன்மை தீமைகளை அடைந்தபோது

அங்கங்கு

அந்தந்த நன்மை தீமைகளில் (முறையே)

முந்தும் உகப்பும்

அதிகமான ஆநந்தத்தையும்

முதிர் வெறுப்பும்

மிகுந்த வெறுப்பையும்

அற்றார்க்கு

அடையாமலிருப்பவருக்கு

மதி வந்து நிலையாம்

அறிவு ஏற்பட்டு நிலையாகும். (அவனும் ஸ்தி2தப்ரஜ்ஞனே என்றபடி.)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top