Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஓதுமென் பாற்கேள்வி யுற்றமைந்த புந்தியுயிர்
மீதுசமா திக்கண் மிகச்சலியாப் – போதினீ
வந்தியோ கத்துணர்வை மன்னுறுதி யாங்கதுகாண்
புந்தியோ கத்தின் புணர்ப்பு.        2.49

ஓதும் என்பால்

உனக்கு உபதேசிக்கும் என்னிடம்

கேள்வி உற்று

கேட்டு

அமைந்த

நன்கு பொருந்திய

உயிர்மீது புந்தி

ஆந்ம தத்வத்தைப்பற்றிய அறிவு

சமாதிக் கண்

மனத்திலே

மிக சலியா போதில்

மிகவும் நிலையா யிருக்கும் சமயத்தில்.

நீ

நீ

யோகத்து வந்து

யோகம் (ஆத்மதர்சனம்) கைவரப்பெற்று

உணர்வை மன்னுறுதி

அறிவுமயமான ஆத்மாவைக் காண்பாய்

ஆங்கு

அந்நிலையில்

அது

அவ்வாத்மதர்சனம்

புந்தி யோகத்தின் புணர்ப்பு காண்

புத்தியோடு கூடிய கர்மயோகத்தின் பலனேயாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top