Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தக்கமரும் புத்தியோ கத்திற் றனஞ்சயனே
யக்கருமந் தூர வவரங்கா – ணொக்கவரும்
புத்திக்கே நிற்கும் புகல் விரும்பு புல்லியர்கா
ணத்தித்தே செய்யு மவர்.        2.45

தனஞ்சயனே!

அர்ஜுன!

தக்கு அமரும் புத்தியோகத்தில்

நன்கு அமைந்த புத்தியுடன் கூடிய கருமத்தைக்காட்டிலும்

அக்கருமம்

(புத்தியற்ற) அந்தக் கேவலகர்மம்

தூர அவரம் காண்

மிகவும் தாழ்ந்தது காண்

ஒக்க வரும் புத்திக்கே

ஒருபடிப்பட்டவனாயிருக்கும் புத்தியிலேயே

நிற்கும்

நிற்கும்

புகல்

நிலையை

விரும்பு

விரும்புவாய்

அ(ர்)த்தித்தே செய்யுமவர்

(காம்யபலன்களை) விரும்பியே கருமங்களைச் செய்கின்றவர்கள்

புல்லியர்காண்

மிகத் தாழ்ந்தவர் காண்!

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top