Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பேறிழவி லொத்தமைந்து பேணு நசை துறந்து
தேறிவரும் யோகத்துச் சேர்ந்து நீ – யாறியமைந்
தித்தகைவி லாங்கரும மேந்துதிநீ யோகந்தா
னொத்த லெனவுரைப்ப ரோர்ந்து.        2.44

பேறு இழவில் ஒத்து அமைந்து

(வெற்றி முதலானவை) ஸித்திப்பதிலும் ஸித்தியாமலிருப்பதிலும் ஒருபடிப்பட்ட வனாயிருந்து

பேணும் நசை துறந்து

(ராஜ்யம் உறவினர் முதலானவற்றை) விரும்பும் ஆசையைவிட்டு

தேறி வரும் யோகத்து சேர்ந்து

இவ்வண்ணமாக ஏற்படும் யோகத்தில் சேர்ந்து

நீ

நீ

ஆறி அமைந்து

மனவமைதியைப் பெற்று

இத்தகைவிலாம் கருமம்

(யுத்தம் முதலிய) இத்தகைய கருமங்களை

ஏந்துதி

செய்வாயாக

யோகம் தான்

யோகம் என்பது

ஒத்தல் என

(முற்கூறியபடி) ஒருபடிப்பட்ட மனத்தையுடையவனாயிருக்கையே என்று

ஓர்ந்து

ஆராய்ந்து

உரைப்பர்

(அறிவாளிகள்) சொல்லுவர்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top