Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கருமத்தே யுன்ற னதிகாரங் கண்டாய்
வருமப் பயனிலணு மன்னா – தொருமித்து
மற்றதனுக் கேதுவா மன்னேல் கருமமலா
வெற்றமைவில் வேண்டா விருப்பு.       2.43

உன்றன் அதிகாரம்

நீ விருப்பம் வைக்கவேண்டியது

கருமத்தே கண்டாய்

கர்மஸ்வரூபத்திலேயே என அறிவாய்

வரும் அப்பயனில்

அக்கர்மங்களால வரும் சுவர்க்கம் முதலான தாழ்ந்த பலன்களில்

அணு மன்னாது

சிறிதும் ஈடுபடாது

மற்று

மேலும்

அதனுக்கு

கர்மபலங்களுக்கு

ஒருமித்து ஏதுவா மன்னேல்

நீ ஒருவனே ஹேதுவென்று அநுஸந்திக்காதே

கருமம் அலா வெற்று அமைவில்

கர்மமே செய்யாமலிருக்கும் வீணான நிலையில்

விருப்பு வேண்டா

விருப்பத்தை வைக்காதே

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top