Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முக்குணத்தோர் பண்புரைக்கு முண்டுமறை நீமன்னா
வக்குணத்து மன்னே லவாநெஞ்சா – யிக்குணத்தாற்
சாருதுய ரற்றென்றுஞ் சத்துவத்தி னப்புறத்தி
லாருதியோ கக்கேம மற்று.         2.41

மன்னா

அரசனே

மறை

வேதமானது

முக்குணத்தோர் பண்பு

ஸத்வம். ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களை உடையவர்களுடைய அந்தந்த குணங்களுக்குத் தக்க விஷயங்களை

மூண்டு உரைக்கும்

மிகவும் உபதேசிக்கும்

நீ

நீ

அக்குணத்து

( ஒன்றோடொன்று கலந்த) அந்த முக்குணங்களில்

மன்னேல்

ஈடுபடாதே

இக்குணத்தால்

இந்த ரஜஸ்தமோகுணங்களால்

அவா நெஞ்சாய்

(ஸுகம், லாபம், ஜயம் முதலானவற்றில்) ஈடுபட்ட (நெஞ்சையுடையவனாகையாலே

சாரு(ம்) துயர் அற்று

ஏற்படும் (துக்கம்,நஷ்டம், தோல்வி முதலானவை) இல்லாதவனாய்

இயோகக் கேமம் அற்று

(ஆத்மஸ்வரூபம். அதையடைய உபாயம் ஆகியவை தவிர்ந்த மற்ற) பொருள்களை அடைவதாகிற யோகத்தையும், அடைந்த அவற்றை ரக்ஷிப்பதாகிற க்ஷேமத்தையும் பற்றி முயற்சியற்றவனாய்

என்றும் சத்துவத்தின் அப்புறத்தில் ஆருதி

என்றும் ஸத்வகுணத்தை நிறைத்துக்கொண்டு, (முற்கூறிய யோகக்ஷேமத்தில்) வேறுபட்ட ஆத்மஸ்வரூபத்தில் நிலைநிற்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top