Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காமத்தை யுன்னிக்கணிசித்து மேலுலகைச்
சேமத்தை யிட்டுச் செனித்துழலு – மீமத்
தியற்றிதரும் போகத்தி லின்பத்தை நோக்கி
முயற்றியுட னேயெழுவர் மூண்டு.       2.39

காமத்தை உன்னி

காமங்களையே நினைந்து

மேல் உலகை கணிசித்து

ஸ்வர்க்கம் முதலான (ப்ராக்ருதமான) மேல் உலகங்களையே பெறவிரும்பி

சேமத்தை இட்டு

கர்மசேஷம் காரணமாக

செனித்து உழலும்

மறுபடியும் மறுபடியும் பிறந்து உழலும்படியானதாய்

ஈமத்து

அழியக்கூடியதாய்

இயற்றி தரும்

முயன்று செய்யவேண்டிய கிரியைகளால் உண்டாகுமதான

போகத்தில் இன்பத்தை நோக்கி

சுவர்க்கபோகம் முதலானவற்றிலுள்ள சிற்றின்பத்தைக் கருதி

கற்பதனை கண் காணாதார்

(வேதத்தின் உத்தரபாகத்தில்) கற்கப்படும் மோக்ஷத்தைக் கண்ணாலும் காணமாட்டார்கள்

முயற்றியுடனே

முயற்சியோட

மூண்டு எழுவர்

ஈடுபாட்டுடன் எழுவார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top