Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இன்றிகலிற் பொன்றினீ யிந்திரலோ கம்பெறுதி
வென்றியுறி லாளுதியிம் மேதினியை – யென்றிதனை
யோர்ந்ததனாற் கௌந்தேயா வுற்றெழு நீ வெஞ்சமத்துத்
தீர்ந்தமனத் தோடுந் தெளிந்து.         2.34

கௌந்தேயா

குந்தீபுத்திரனே!

இன்று

இன்றைக்கே

இகலில்

போரில்

நீ பொன்றில்

நீ இறந்தாலும்

இந்திரலோகம் பெறுதி

பரமைச்வர்யமுடையவனாகையாலே இந்திரன் எனப்படும் பரமாத்மாவின் உலகம் பெறுவாய்

வென்றியுறில்

(போரில்) ஜயித்தாயானால்

இம்மேதினியை ஆளுதி

இந்த பூமியை ஆள்வாய்

என்று இதனை ஓர்ந்து

என்னும் இவ்விஷயத்தை ஆராய்ந்து

அதனால்

அது காரணமாகவே

நீ

நீ

வெஞ்சமத்து

போரில்

தீர்ந்த மனத்தோடும்

உறுதிகொண்ட நெஞ்சத்தோடும்

தெளிந்து

தெளிவுற்று

உற்று எழு

உறுதியுடன் எழுந்திருப்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top