Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கொண்டாட்டுற் றார்க்குக் கொடிதுபழி சாமதனிற்
கண்டார்க ளச்சத்தாற் காதமரிற் – றிண்டாடி
மீண்டா யெனநினைப்பர் மேலார் வியப்புறு நீ
வேண்டாத நோய்மையுறேன் மிக்கு.        2.32

கொண்டாட்டு உற்றார்க்கு

உலகத்தால் கொண்டாடப் பட்டவர்களுக்கு

பழி

பழிச்சொல்

சாமதனில் கொடிது

மரணத்தைக்காட்டிலும் கொடியது

கண்டார்கள்

(நீ பின் வாங்குவதைக்) காண்பவர்கள்

காதமரில்

கடும்போரில்

திண்டாடி

திகைத்து

அச்சத்தால்

பயத்தால்

மீண்டாய்

பின்வாங்கிவிட்டாய்

என நினைப்பர்

என்று நினைப்பார்கள்

மேலார் வியப்புறும் நீ

மஹாரதர்களாலும் மதிக்கப்படும் நீ

மிக்கு வேண்டாத நோய்மை உறேல்

(உனக்கு ) மிகவும் தகாத சிறுமையை அடையாதே

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top