Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நின்ற வுயிர்வதத்தை நேரா துடலெதிலு
மென்றதனி லெங்கு மிடரெய்தே – லுன்றருமம்
பார்த்துந் தளர்வுறாய் பார்த்திபர்க்குத் தன்மப்போர்க்
கேற்குந் தகைமையதொன் றில்.   2.29

உடல் எதிலும் நின்ற உயிர்

தேவர் முதலான எந்த சரீரத்திலிருக்கும் உயிரும்

வதத்தை நேராது

(என்றுமே) அழிவை அடையாது

என்று

என்னும் காரணத்தால்

அதனில்

அந்தந்த சரீரங்களோடு கூடிய ஆத்ம விஷயத்தில்

எங்கும்

எக்காலத்திலும்

இடர் எய்தேல்

துன்பமுறாதே

உன் தருமம் பார்த்தும்

யுத்தமே உன்னுடைய தருமம் என்று அறிவதனாலும்.

தளர்வுறாய்

நீ தளர்ச்சியடையாமலிருக்க வேண்டும்

பார்த்திபர்க்கு

அரசர்களுக்கு

தன்மப்போர்க்கு ஏற்கும் தகைமையது

தர்மயுத்தத்தைப் போலே சிறந்த பல ஸாதனம்

ஒன்று இல்

வேறொன்று இல்லை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top