Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உண்டாய்ப் பிறந்துவளர்ந் தோங்கிக் குறைந்திறத்தல்
கொண்டோ டுடம்பியல்வைக் கூடானைக் – கண்டா
னெவனைத்தான் கொல்லுவிக்க வேல்வான்மற் றெங்ங
னெவனைத்தான் கொல்வா னியன்று.        2.21

உண்டாய்

(அஸ்தி என்னலாம்படி விகாரங்களோடு) இருப்பதாய்

பிறந்து

(ஜாயதே என்னலாம்படி) பிறப்பதாய்

வளர்ந்து

(பரிணமதே என்னலாம்படி) மாறுபாட்டை அடைவதாய்

ஓங்கி

(விவர்த்த4தே என்னலாம்படி) விருத்தியடைவதாய்

குறைந்து

(அபக்ஷீயதே என்னலாம்படி) க்ஷயத்தை அடைவதாய்

இறத்தல் கொண்டு

(விநச்யதி என்னலாம்படி) அழிவையுடையதாய்

ஓடு

(இப்படி ஆறு விகாரங்களையும் உடையதாய்ச்) செல்லா நிற்கிற

உடம்பு இயல்வை கூடானை

உடம்பின் இவ்விகாரங்கள் பொருந்தப்பெறாத ஆத்மாவை

கண்டான்

(உள்ளபடி) அறிந்தவன்

எங்ஙன்

எப்படி

எவனை

எவ்வாத்மாவை

தான்

தானே

இயன்று கொல்வான்

முயன்று கொல்வான்?

மற்று

மேலும்

எங்ஙன்

எப்படி

எவனை

எவ்வாத்மாவை

தான்

தானே

கொல்லுவிக்க ஏல்வான்

(மற்றொருவனைக்கொண்டு) கொலை செய்விக்க முயலுவான்?

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top