Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்றும் பிறவா னிவனிறவான் முன்புளனாய்ச்
சென்று பிறந்திலனாஞ் செய்தியில – னின்றென்றுந்
தொல்லையவ னானவிவன் றோன்றுமுடல் கொன்றாலுங்
கொல்லரிய னாகுங் குறித்து.   2.20

இவன்

இவ்வாத்மா

என்றும் பிறவான்

என்றுமே உண்டானவனல்லன்

இறவான்

அழியவும்மாட்டான்

முன்பு

பிரளயகாலத்தில்

உளனாயச் சென்று பிறந்து

உண்டாகிச் சென்று பிறந்து

நின்று

கல்ப முடிவு வரை வாழ்ந்து

இலனாம் செய்தி இலன்

பிறகு இல்லாதவனாகும் தன்மையும் இல்லாதவன்

என்றும் தொல்லையவனான இவன்

எப்போதும் பிறப்பு இறப்பு முதலான விகாரங்களற்றவனான இவ்வாத்மா

தோன்றும் உடல் கொன்றாலும்

கண்ணுக்குத் தெரியும் உடலை (ஒரு பொருள்) கொன்றாலும்

குறித்து கொல்லரியன் ஆகும்

(எப்பொருளுக்கும்) இலக்காக்கிக் கொல்லமுடியாதவனாவன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top