Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நில்லா வுடலசத்து நிற்குமுயிர் சத்ததனா
லில்லா ததுக்குண்மை யில்லையுண்மைக் – கில்லாத
தென்றிரண்டி னீறுங்கண் டேய்ந்தவத் தத்துவத்தை
நின்றென்றுங் காண்பார் நிகழ்ந்து.   2.16

நில்லா உடல் அசத்து

நிலை நில்லாததான உடல் 'அஸத்' எனப்படுகிறது

நிற்கும் உயிர் சத்து

என்றும் நிலைநிற்கும் ஆத்மாவானது 'ஸத்' எனப்படுகிறது

அதனால்

இக்காரணத்தால்

இல்லாததுக்கு உண்மை இல்லை

அஸத்தான உடலுக்கு நித்தியத்தன்மை இல்லை

உண்மைக்கு இல்லாதது இல்லை

ஸத்தான ஆத்மாவுக்கு அநித்தியத்தன்மை இல்லை

என்று

இவ்வண்ணமாக

இரண்டின் ஈறும் கண்டு

(உடல் உயிர் ஆகிய) இரண்டைப்பற்றிய முடிவையும் கண்டு

ஏய்ந்த அத்தத்துவத்தை

பொருந்தி நிற்கும் அவ்வுண்மையை

நின்று என்றும் நிகழ்ந்து காண்பார்

(அறிவாளிகள்) எல்லா இடங்களிலும் காலங்களிலும் நிலைகளிலும் காண்பார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top