Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஈச னவனொருவ னெல்லா ரிதயமாந்
தேச மதினிற்குஞ் சீர்விசயா- பாசமுட
னெல்லா வுயிர்களையு மாயையினா லேதிரிக்க
வல்லா னியந்திரத்தில் வைத்து.          18.61

சீர்விசயா

குணங்கள் மிக்க அர்ஜுனா!

ஈசன் அவன் ஒருவன்

அனைவரையும் நியமிக்கும் ஒப்பற்ற வாஸுதேவன்

எல்லார் இதயமாம் தேசம் அதில்

எல்லா உயிர்களுக்கும் (அறிவு உதயமாகும்) இதயமாகிற இடத்தில்

எல்லா உயிர்களையும்

எல்லா ஜீவர்களையும்

பாசமுடன் இயந்திரத்தில் வைத்து

(விஷயங்களில்) பற்றோடு கூடியவர்களாய் சரீரமாகிற இயந்திரத்தில்வைத்து

மாயையினாலே

(ஸத்வ ரஜஸ் தமோகுணமயமான ப்ரக்ருதியாகிற) மாயையினாலே

திரிக்கவல்லான்

அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச்செய்துகொண்டு

நிற்கும்

நிற்கிறான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top