Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்மையமர் தன்கருமந் தன்னாற் பிணிப்புண்டு
நன்மை யமர்ந்தவமர் நாணிநீ – யுன்மருவு
மோகத்தால் மீண்டிடினு மூண்டே யவசனாய்
வேகத்தாற் செய்வுதிநீ மிக்கு.          18.60

தன்மை அமர் தன்கருமம் தன்னால்

உன் முன்வினையால் உனக்குரிய ஸௌர்யமாகிற செயலால்

பிணிப்புண்டு

கட்டுப்பட்டவனாய்

அவசனாய்

அதனாலேயே உன் சரீரத்திற்கு வசப்பட்டவனாய்

உன் மருவு மோகத்தால்

உன்னையடைந்திருக்கும் அறிவின்மையால்

நாணி

(உறவினர் முதலானாரைக் கொல்வதற்கு) வெட்கமுற்று

நீ

நீ

நன்மை அமர்ந்த அமர் மீண்டிடினும்

(இப்போது) நன்மையை விளைக்கும் போரிலிருந்து கைவாங்கினாலும்

வேகத்தால் மூண்டே

(பிறர் அவமதிக்கும்போது) உண்டான வேகத்தாலே போரிட முற்பட்டு

மிக்கு செய்வுதி

மிகுதியாகப் போர் புரியவே போகிறாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top