Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நின்று நியதக் கருமத்தை நேர்ந்தியல்வென்
றெனறு மியன்றே யிகல்விசையா-வொன்றிவருஞ்
சங்கம் பயன்றுறப்பார் சாருந் தியாகந்தா
னங்கந்த முற்குணத்த தாம்.         18.9

இகல் விசையா

வீரனான விஜயனே!

நியத கருமத்தை

நித்யம் நைமித்திகம் ஆகிய கர்மத்தை

நேர்ந்து

'எம்பெருமானுடைய ஆராதன ரூபமானது' என்று அறிந்து

இயல்வு என்று

'அதைச் செய்வது தானே பயன்' என்று கருதி

என்றும் நின்று இயன்றே

எப்போதும் உறுதியாக அனுஷ்டித்து

ஒன்றி வரும்

(அந்தக் கர்மத்தை அனுஷ்டிக்கும் போது) சேர்ந்து வரும்

சங்கம் பயன் துறப்பார்

‘இக்கர்மம் என்னுடையது' என்னும் பற்றையும் அந்தக் கர்மத்தினுடைய பலனையும் விடுகின்றவர்கள்

சாரும் தியாகம்தான்

கைக்கொள்ளும் தியாகமானது

அங்கு அந்த முற்குணத்ததாம்

ஸத்வம் ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களில் முதலாவதான ஸத்வ குணத்தால் விளைவதாகும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top