Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

துக்கமெனக் கன்மத்தைத் தோன்று முடல்வருத்த
மிக்கபயத் தாற்செய்யா விட்டவன்றான் – சிக்கெனவில்
வாய்ந்த விடைக்குணத்தான் மற்றதுவிட் டப்பயனா
மேய்ந்த வறிவுபெறா னிங்கு.        18.8

உடல் வருத்தம் தேஎன்றும் மிக்கபயத்தால்

உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் மிகுந்த அச்சத்தாலும்

துக்கம் என

துன்பமயமாயிருப்பது என்னும் காரணத்தாலும்

கன்மத்தை

நித்யம் நைமித்திகம் முதலான கர்மங்களை

செய்யாவிட்டவன் தான்

அனுஷ்டிக்காமல் விட்டவன்

இவ் ஆய்ந்த இடைக்குணத்தால் மற்று அது விட்டு

இங்கு ஆராய்ந்து கூறப்பட்ட ரஜோகுணத்தால் அக்கர்மங்களை விட்டவனாகையாலே

இங்கு

இவ்வுலகில்

அப்பயனாம் ஏய்ந்த அறிவு

(ஸாத்விகமான) த்யாகத்தின் பயனான நல்ல ஜ்ஞானத்தை

சிக்கெனப் பெறான்

உறுதியாகப் பெறமாட்டான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top