Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இவ்வண்ண மாயனுக்கு மேந்துயர்சீர்ப் பார்த்தனுக்கும்
மெய்வண்ணம் வார்த்தை விளைந்தபடி- செய்வண்ண
மீண்டேநான் கேட்டேனிவ் வற்புதத்தை யிவ்வுடலிற்
பூண்டே மயிரெறிவாம் பூண்டு.        18.74

இவ்வண்ணம்

இவ்விதமாக

மாயனுக்கும்

மாயப்பிரானான கண்ணனுக்கும்

ஏந்து உயர்சீர் பார்த்தனுக்கும்

சிறந்த அறிவுபொருந்திய அர்ஜுநனுக்கும்

மெய்வண்ணம் வார்த்தை விளைந்தபடி

உண்மையாகவே நிகழ்ந்த கலந்துரையாடலை

செய்வண்ணம்

அது நடந்தபோதே

இவ்வுடலில் மயிரெறிவாம் பூண்டே

எனது உடலில் மயிர்கூச்செறியும்படியாக

இவ்வற்புதத்தைப் பூண்டு

இந்த அற்புதக்காட்சியைக்கண்டு

ஈண்டே நான் கேட்டேன்

இப்போதே நான் கேட்டேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top