Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மானிடரி லாங்கவனின் மற்றொருவ னென்னுகப்பிற்
ரீனியல்வு மிக்கவவன் றானில்லை – மேனிகழு
மெக்காலு மேதினியி வில்லையா மென்னுகப்பில்
தக்கார்வ மிக்கினியோன் றான்.         18.69

மேதினியில்

இவ்வுலகிலுள்ள

மானிடரில்

மனிதர்களில்

ஆங்கு அவனின் மற்றொருவன்

இந்த சாஸ்திரத்தை வியாக்கியானம் செய்பவனைக் காட்டிலும் வேறொருவன்

என் உகப்பில் தான் இயல்வு மிக்க அவன் தான் இல்லை

எனக்கு மிகவும் இனியது செய்பவன் ஒருவனும் இல்லை

மேல் நிகழும் எக்காலும்

மேல் வரும் எக்காலத்திலும்

என் உகப்பில் தக்கார்வம் மிக்கு இனியோன் தான்

என்னிடம் அன்புசெய்வதில் ஈடுபட்டு எனக்கு மிகவும் இனியவனாயிருப்பவன்

இல்லையாம்

இல்லை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top