Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மற்றிக் கருமங்க ளெல்லா மருவியெனைப்
பற்றிப் பயின்றென்றும் பார்த்தியல்வா- னற்றமற
மேவு மெனதருளால் மிக்கடையு மற்கமற
ஓவுதலி லாப்பதத்தை யுற்று.           18.56

மற்று இக்கருமங்கள் எல்லாம்

(முற்கூறிய நித்ய நைமித்திக கர்மங்கள் மாத்திரமல்லாமல்) காம்யகர்மங்கள் அனைத்தையும் கூட

எனை மருவிப் பற்றிப் பயின்று

என்னிடத்தில் கர்த்ருத்வம் முதலானவற்றை ஸமர்ப்பித்தவனாய்

என்றும் பார்த்து இயல்வான்

எப்போதும் செய்பவன்

அற்க மற

குறைவில்லாததாய்

ஓவுதல் இலா

அழியாததான

பதத்தை

ப்ராப்யமான என்னை

அற்றம் அற மேவும் எனது அருளால்

தடையில்லாமல் வெள்ளமிடும் எனதருளால்

உற்று

அணுகி

மிக்கு அடையும்

பரிபூர்ணமாகப் பெறுவான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top