Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புகழ்விரும்பிப் புன்பயனை வேண்டிப் பொருளை
மிகவவ்விப் பீடையினை மேவித்-தகவென்னுஞ்
சுத்தியுறா துட்களிப்புச் சோகத் துறுங்கர்த்தா
மத்திய மாங்குணத்தான் மற்று.        18.27

புகழ்விரும்பி

புகழை விரும்பி

புன்பயனைவேண்டி

கர்மத்திற்குரிய தாழ்ந்த பயனை வேண்டி

பொருளை மிக வவ்வி

(கர்மம் செய்வதற்குச் செலவிடுவதில் கருமியாய்) பொருளில் மிகவும் ஆசைகொண்டு

பீடையினை மேவி

(கர்மங்கள் புரிவதற்குப்) பிறரைத் துன்புறுத்துகிறவனாய்

தகவு என்னும் சுத்தி உறாது

(கர்மாநுஷ்டாநத்துக்குத்) தகுதி அளிக்கும் பரிசுத்தியை அடையாமல்

உள்களிப்பு சோகத்து உறும் கர்த்தா

(போர் முதலான கர்மங்களில் வெற்றி தோல்விகள் காரணமாக) ஆனந்தமும் வருத்தமும் அடைகிறவனாயுள்ள செயல்புரிகிறவன்

மற்று மத்தியமாம் குணத்தான்

முற்கூறிய ஸத்வகுணத்தைக்காட்டிலும் வேறுபட்ட நடுக்குணமாகிய ரஜோகுணத்தையுடைய கர்த்தா ஆவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top