Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இவ்வகையா லீசனாற் கர்த்தாவா மிவ்வுயிரிற்
செவ்வை மதியாதுவெறுஞ் சீவனை – யெவ்வகையிற்
கர்த்தாவா மென்னவே காண்கின்ற துன்மதிதா
னெத்தாரும் புத்தியு றான்.       18.16

இவ்வகையால்

முன் இரு ஸ்லோகங்களில் சொன்னபடி

ஈசனால் கர்த்தாவாம் இவ்வுயிரின் செவ்வை மதியாது

ஸர்வேஸ்வரனின் அனுமதியினால் செயல்புரிபவனாய் இருக்கும் இந்த ஜீவாத்மாவின் தன்மையை அறியாமல்

வெறும் சீவனை

ஜீவாத்மாவை மாத்திரம்

எவ்வகையில்

எல்லாவகையிலும்

கர்த்தாவாம் என்னவே

செயல்புரிபவனாகிறான் என்றே

காண்கின்ற

அறிகிற

துன்மதி தான்

விபரீதமான அறிவையுடையவன்

ஒத்து ஆரும் புத்தி உறான்

(ஸாஸ்த்ரங்களை) ஒட்டி உண்டான உண்மையறிவு இல்லாதவனாவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top