Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பதினெட்டாம் அத்யாயம் - மோக்ஷோபதேச யோகம்

அத்தியாயப்பொருளின் சுருக்கம்

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.       18.0

செய்கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும்

அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஸ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்

மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும்

உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வ குணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்

உய்கருமம் சாரும் கதியும்

முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விககர்மத்தின் பலன் முக்தி என்பதையும்

இச்சாரத்தின் சாரமும்

ஸாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்தி ப்ரபத்திகளே என்பதையும்

பதினெட்டாம் ஓத்து

(கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்

உற்று ஒரும்

நன்கு ஆராய்ந்துரைக்கும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top