Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காழ்த்துப் புளித்துப்பாய்க் கைக்கொதித்துத் தான்சுடிதா
யாழ்ச்சிக் கொடிதா யழல்விளைத்து – மூழ்ச்சியினிற்
றுக்கஞ்சோ கம்பிணியைச் சூழ்க்கு நடுக்குணத்தி
னொக்க வுகந்துண்ணு மூண்.        17.9

நடுக்குணத்தின்

முக்குணங்களில் நடுக்குணமான ரஜோகுணத்தினால்

ஒக்க உகந்து உண்ணும் ஊண்

பொருத்தமாக விரும்பி உண்ணும் உணவு

காழ்த்து

கடுமையான துவர்ப்புடையதாய்

புளித்து

புளிப்புடையதாய்

உப்பாய்

(மிகுந்த) உவர்ப்புடையதாய்

கைக் கொதித்து

(மிகுந்த) உஷ்ணமுடையதாய்

தான்கடிதாய்

கடுமையானதாய்

ஆழ்ச்சி கொடிதாய்

(உடலை) எரியச் செய்யும் காரத்தினால் கொடியதாய்

அழல்விளைத்து

எரிச்சலை உண்டு பண்ணி

மூழ்ச்சியினில்

இறுதியில்

துக்கம் சோகம் பிணியை

துன்பத்தையும் வருத்தத்தையும் நோயையும்,

சூழ்க்கும்

விளைக்கும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top