Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தேவர் மறையோர் குருக்கண் மிகவுணர்ந்தோர்
மேவ வருச்சித்தன் மெய்தூய்மை-யோவாத
செவ்வை மகளிரிடைச் செல்லாமை கொல்லாமை
யிவ்வகைகா யத்தவமா மிங்கு.         17.15

தேவர் மறையோர் குருக்கள் மிக உணர்ந்தோர் மேவ அருச்சித்தல்

தேவர்கள் வேதமோதும் இரு பிறப்பாளர்கள் ஆசார்யர்கள் மிக்க அறிவுடையவர்கள் ஆகியவர்களை நன்கு ஆராதிப்பது

மெய் தூய்மை

(புண்ய தீர்த்தமாடுவது முதலான) உடலுக்குப் பரிசுத்தியை விளைக்கும் செயல்கள்

ஓவாத செவ்வை

எப்போதும் மனத்தில் எண்ணியபடியே செயல்புரிதல்

மகளிரிடை செல்லாமை

பெண்களிடம் காமச்செயல்களைப் புரியா திருத்தல்

கொல்லாமை

உயிர்களைத் துன்புறுத்தாமலிருத்தல்

இவ்வகை

முதலானவை,

இங்கு

இவ்வுலகில்

காயத் தவமாம்

உடலால் செய்யப்படும் தவம் எனச்சொல்லப்படுகிறது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top