Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மன்னிச் செயுமதுவு மற்றதுவு முற்றறிவு
தன்னிற் பிரமாணஞ் சாத்திரமே – யென்னுமதா
லந்த விதான மறிந்தே கருமத்தை
முந்த வியனீ முயன்று.        16.23

மன்னி செயும் அதுவும்

கைக்கொண்டு செய்யத்தக்கதையும்

மற்றதுவும்

அப்படிச் செய்யத்தகாததையும்

உற்று

ஆராய்ந்து

அறிவுதன்னில்

அறியும் விஷயத்தில்

பிரமாணம்

நல்லறிவுக்குத் தனிக்காரணமாயிருப்பது

சாத்திரமே

வேதமே

என்னுமதால்

என்னும் காரணத்தால்

நீ

நீ

அந்த விதானம் அறிந்தே

சாஸ்திரங்களில் சொல்லப்படும் (புருஷோத்தமனாகிற அந்தத்தத்துவத்தையும் (அவனை அடைய உபாயமாகிற) கர்மத்தையும் (உள்ளபடி) அறிந்து

கருமத்தை

அந்தக்கர்மத்தை

முந்த

முதலில்

முயன்று இயல்

முயன்று அனுஷ்டிப்பாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top