Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

விட்டமருஞ் சாத்திரத்தின் மேய விதியையெவ
னிட்டமிகத் தன்னா லியல்கின்றான் – றட்டறுசீர்ச்
சித்தியது சேர்ந்தடையான் சேரான் சுகம்பரமா
முத்தியது சாரான் முதிர்ந்து.          16.22

அமரும் சாத்திரத்தின் மேய

(எனது ஆணையாகப்) பொருந்தி நிற்கும் வேதத்தில் உள்ள

விதியை

என் ஆணையை

விட்டு

கைவிட்டு

எவன்

எவனொருவன்

இட்டமிக தன்னால் இயல்கின்றான்

தன் விருப்பப்படி செயல் புரிகிறானோ

(அவன்) தட்டறு சீர் சித்தி அது

தடையற்ற சிறப்புடைய சுவர்க்கம் முதலான மறுமைப் பயன்களை

சேர்ந்து அடையான்

அடைந்து இன்புற மாட்டான்

சுகம் சேரான்

இம்மை இன்பங்களையும் அடைய மாட்டான்

முதிர்ந்து

சாதனங்களைப்பற்றி நின்று

பரமாம் முத்தி அது

(என்னை அடைவதாகிற) மேலான மோக்ஷத்தையும்

சாரான்

அடையமாட்டான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top