Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

செய்கின்ற வில்லறமுஞ் செய்யாத் துறவறமு
நைகின்ற வாசுரர்க ணன்கறியார் – மெய்குன்றாத்
தூய்மையுட னாசாரஞ் சொல்லின் பயனாய
வாய்மையுமற் றில்லையவர் மாட்டு.        16.7

நைகின்ற ஆசுரர்கள்

தாழ்ந்தவர்களான அசுரப் பிறவிகள்

செய்கின்ற இல்லறமும்

ஐஸ்வர்யங்களை ஸாதித்துத்தரும் வைதிகமான ப்ரவ்ருத்தி தர்மங்களையும்

செய்யாத் துறவறமும்

அந்த ப்ரவ்ருத்தி தர்மங்களிலிருந்து நீங்கினவர்க்குரிய மோக்ஷத்தை ஸாதித்துத் தருவதான வைதிகதர்மத்தையும்

நன்கு அறியார்

உள்ளபடி அறிய மாட்டார்கள்

மெய்குன்றா தூய்மையுடன்

வைதிக தர்மங்களை அனுஷ்டிப்பதற்குரிய ஸுத்தி,யும்

ஆசாரம்

(முற்கூறிய ஸுத்தியை விளைக்கும் ஸந்த்யாவந்தனம் முதலான) ஆசாரமும்

சொல்லின் பயனாய வாய்மையும்

வாய்படைத்த பயனான உண்மையை உரைத்தலும்

அவர் மாட்டு இல்லை

அவர்களிடம் இல்லை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top