Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பகவத் கீதை வெண்பா
(பதினைந்தாம் அத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம்)

ஏலும் புருடோத் தமனான வேற்றத்தைச்
சால விறைவனே தானுரைத்த – மேலான
கீதை பதினைந்தா மோத்துக் கெழுமிகுசீர்ப்
போதப் பொருளுரைத்தோம் பூண்டு.       15.20A

ஏலும் புருடோத்தமனான ஏற்றத்தை

தனக்குத் தகுந்ததாயிருக்கும் 'புருஷோத்தமன்' என்னும் பொருத்தமான பெயரைப் பெற்றிருக்கும் சிறப்பை

இறைவனே தான்

ஸர்வேஸ்வரனான கண்ணன் தானே

சால உரைத்த

நன்றாகச்சொன்ன

மேலான கீதை பதினைந்தாம் ஓத்து

கீதையின் சிறந்த பதினைந்தாம் அத்தியாயத்தினுடைய

கெழு மிகு சீர் போதப் பொருள்

நிறைந்ததாய் சிறப்புற்ற தான ஞானப்பொருளை

பூண்டு உரைத்தோம்

வெண்பாவில் இட்டுச் சொன்னோம்

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் பதினைந்தாம் அத்தியாயம் முற்றிற்று.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top