Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இன்னேயிச் சாத்திரமா யேய்ந்த மறைபொருளை
மன்னே யுரைத்தேனான் மற்றிதனை – நன்னெறியா
வுற்றறிந்தா னேரே யுணர்ந்தானாம் பார்த்தனே
மற்றனைத்துஞ் செய்தவனாம் வாய்ந்து.        15.20

பார்த்தனே

குந்தீபுத்திரனே!

மன்னே?

அரசனே!

இன்னே

இவ்வண்ணமாக

இச்சாத்திரமாய் ஏய்ந்த மறை பொருளை

புருஷோத்தமவித்யையாகிற பரம ரஹஸ்யமான ஸாஸ்த்ரத்தை

நான் உரைத்தேன்

நான் உனக்கு உபதேஸித்தேன்

மற்று இதனை

இந்த ஸாஸ்த்ரத்தை

நல் நெறியா உற்று அறிந்தான்

(அறிவடைவதற்கு) நல்ல வழியாகக்கொண்டு அறிந்தவன்

நேரே உணர்ந்தானாம்

என்னை அடைவதற்கு வேண்டிய அறிவனைத்தையும் பெற்றவனாகிறான்

மற்று

மேலும்

அனைத்தும் வாய்ந்து செய்தவனாம்

அதற்குச் செய்யவேண்டியதனைத்தையும் நன்கு செய்தவனாகிறான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top