Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அந்தவுயிர்ச் சோதியினை யாதித்தன் சந்திரனுஞ்
செந்தழலுந் தாம்விளக்கஞ் செய்யார்க – ளெந்தவுயிர்
தானடைந்தார் மீளார்க டாம மஃதெனக்கே
யானவகை நீதா னறி.       15.6

எந்த உயிர்தான் அடைந்தார்

எந்த ஜீவாத்மாவாகிற சோதியை அடைந்தவர்கள்

மீளார்கள்

(ஸம்ஸாரத்துக்குத்) திரும்பமாட்டார்களோ

அந்த உயிர்ச்சோதியினை

ஜீவாத்மாவாகிற அந்தச் சோதியை

ஆதித்தன்

சூரியனும்

சந்திரனும்

சந்திரனும்

செந்தழலும் தாம்

சிவந்த அக்னியும் கூடிநின்றாலும்

விளக்கம் செய்யார்கள்

பிரகாசிக்கச் செய்யமாட்டார்கள்

தாமம் அஃது

சிறந்த சோதியான அந்த ஜீவாத்மா

எனக்கே ஆனவகை

எனக்கே உடைமையாயிருப்பதை

நீ தான் அறி

நீ தான் அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top