Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கீழ்தனிலு மேலுங் கிளைகளதுக் குப்பரந்து
தாழ்வில் குணத்துயருஞ் சார்புலன்கள் – சூழ்தளிரா
மூலங்கீ ழும்பரக்கு முன்னை வினைத்தொடர்பாய்
ஞாலத்தின் மேலமர்ந்து நன்கு.         15.2

அதுக்கு

ஸம்ஸாரமாகிற அந்த மரத்துக்கு

கிளைகள்

(பல்வகைப்பிறவிகளாகிற) கிளைகள்

கீழ்தனிலும் மேலும்

கீழேயும் மேலேயும்

பரந்து

(மறுபடியும்) பரவி

தாழ்வு இல் குணத்து உயரும்

என்றும் குறையாத ஸத்வரஜஸ் தமோகுணங்களாலே வளர்கின்றன

சார்புலன்கள்சூழ் தளிராம்

அனுபவிக்கத்தக்க ஸப்தம் முதலான விஷயங்கள் அக்கிளைகளைச் சூழ்ந்து முளைத்திருக்கும் தளிர்களாகின்றன

கீழும்

கீழேயுள்ள

ஞாலத்தின்மேல்

பூமியின் மேல்

முன்னை வினைத்தொடர்பாய்

பூர்வகர்மபந்தங்களாகிற

மூலம்

அம்மரத்தின் வேர்கள்

நன்கு அமர்ந்து பரக்கும்

உறுதியாக ஊன்றிப் பரவுகின்றன

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top