Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

குன்றா வமுதக் குணப்பிரம மாமுயிர்க்கு(ம்)
நன்றா மிருப்பிடந்தா னானாவ – னின்றாருந்
தன்மப் பயனுக்குந் தானொருமை சார்சுகமா
நன்மைக்கு மென்று நயந்து.        14 .27

நான்

நான்

குன்ற அமுதக் குணப் பிரமமாம்

அழியாமையையும் மரணமின்மையையும் குணமாகவுடைய ப்ரஹ்மம் எனப்படும்,

உயிர்க்கும்

ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கும்,

நின்று ஆரும் தன்மப் பயனுக்கும்

நிலையான தர்மமான பக்தியோகத்தின் பயனான மிகச் சிறந்த ஐஶ்வர்யத்துக்கும்,

தான் ஒருமை சார் சுகமாம் நன்மைக்கும்

ஒரு மனமுடைய ஜ்ஞானிகள் அடையும் பேரின்பமாகிற நற்பயனுக்கும்,

என்றும்

எக்காலத்திலும்,

நயந்து

விருப்பத்துடன்,

நன்றாம் இருப்பிடம் தான் ஆவன்

நல்ல உபாயமாவேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top