Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மற்றுமுனக் கன்ன மன்னறிவின் மேலறிவை
யுற்றுணரும் வண்ண முரைக்கின்றே – னற்றமறை
யாதறிந்து மாமுனிவ ரிப்பவம்விட் டெய்தினார்
மீதமருந் தன்மையினை மிக்கு. 14.1

அற்றம் அறை யாது அறிந்து

உண்மையை உரைக்கும் எதை அறிந்து

மாமுனிவர்

அதை மனனம் செய்யும் சிறந்த யோகிகள்

இப்பவம் விட்டு

இந்த ஸம்ஸார மண்டலத்தை விட்டு

மீது அமரும் தன்மையினை

பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தை அடைவதாகிற மேலான பேற்றை

மிக்கு எய்தினார்

சிறப்புடன் அடைந்தனரோ

அன்ன

அத்தகையதாய்

மனன் அறிவின் மேல் அறிவை

(ப்ரக்ருதி புருஷர்களைப் பற்றிய) மனத்தால் அறியும் அறிவுகளுக்குள் மேலான அறிவை

மற்றும்

மறுபடியும்

உனக்கு

உனக்கு

உற்றுணரும் வண்ணம் உரைக்கின்றேன்

நன்கு அறியலாம்படி கூறுகின்றேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top