Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்தச் சரீர மிகல்விசயா கேத்திரமென்
றந்தப் பரிசறிவா ராய்ந்துரைப்பார் – முந்திதனை
யீங்கறிவான் கேத்திரஞ்ஞ னென்னுமுயி ரென்றவனை
யாங்கறிவார் சொல்வா ரமைந்து.       13.1

இகல் விசயா

வெற்றியுடைய அர்ஜுனா

இந்த சரீரம்

இந்த உடல்

கேத்திரம் என்று

(ஆத்மாவின் அனுபவத்திற்கு) விளைநிலம் என்று

அந்த பரிசு அறிவார்

அந்த ஸரீரத்தின் தன்மையை அறிபவர்கள்

ஆய்ந்து உரைப்பார்

ஆராய்ந்து கூறுவார்கள்

இதனை

இந்த சரீரத்தை

ஈங்கு

இந்த லீலாவிபூதியில்

முந்து அறிவான்

அனாதிகாலமாக அறிகிறவன்

கேத்திரஞ்ஞன் என்னும் உயிர் என்று

க்ஷேத்ரஜ்ஞன் என்னும் ஜீவாத்மா என்று

அவனை ஆங்கு அறிவார்

அவனுடைய தன்மைகளை அறிபவர்கள்

அமைந்து சொல்வார்

பொருத்தமாகச் சொல்லுவார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top