Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முன்னே நமப்பிறகு மொய்த்தே நமவுனக்கிங்
கெந்நேரஞ் சூழந்துநம வெல்லாமா – மன்னேதான்
வீயாத வீரியஞ்சர் விக்கிரம மிக்கெல்லா
நீயாத லாலெல்லா நீ .      11.41

எல்லாம் ஆம் மன்னே!

எல்லாப் பொருள்களாகவும் ஆகும் பரம்பொருளே!

உனக்கு

உனக்கு

இங்கு முன்னே நம

இந்த விஶ்வரூபத்தின் முன்புறத்தில் வணக்கம்

பிறகும் மொய்த்தே நம

பின்புறமும் அணுகிநின்று வணக்கம்

எந்நேரம் சூழ்ந்து நம

எல்லாக்காலத்திலும், எல்லாப் புறத்திலும் வணக்கம்.

தான் வீயாத வீரியம் சேர் விக்கிரமம் மிக்கு

அழியாத வீரியத்தோடுகூடிய பராக்கிரமம் மிகுந்து

எல்லாம் நீ ஆதலால்

எல்லாப்பொருள்களிலும் நீ பரந்து நிற்கையால்

எல்லாம் நீ

எல்லாப்பொருள்களையும் சொல்லும் சொல்லாலும் சொல்லப்படுபவனும் ஆகிறாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top