Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆன வனந்த வுருவா முனைத்தோள்க
ணானா முகமுதர நான்காண்பன் – றானார்ந்துன்
னந்தநடு வாதியுங் காணேனா னாங்கனைத்தின்
முந்தையிறை யெவ்வுருவா முற்று.    11.17

ஆன அனந்த உருவாம் உனை

எல்லாப்புறத்திலும் எல்லையற்ற உருவத்தையுடைய உன்னை,

தோள்கள் நாநாமுகம் உதரம் நான் காண்பன்

பல தோள்களையும், வாய்களையும், வயிறுகளையும் உடையவனாக நான் காண்கிறேன்,

அனைத்தின் முந்தை இறை!

எல்லாவற்றுக்கும் ஆதி நியந்தாவாய்,

எவ்வுருவா!

அனைத்தையும் உருவாகக் கொண்டவனே!

தான் ஆர்ந்த உன்

தான் எங்கும் நிறைந்திருக்கும் உன்னுடைய,

அந்தம் நடு ஆதியும்

எல்லையையும், நடுவையும், தொடக்கத்தையும்,

ஆங்கு

அந்த விஶ்வரூபத்தில்,

நான் முற்று காணேன்

நான் முழுவதையும் காணவில்லை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top