Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பலபலவாங் கண்முகங்கள் பண்பார் வியப்புப்
பலபலவாம் பார்க்கும் பரிசு – பலபலவாம்
பூண்சிறந்த வான்கலன்கள் போற்றிப் பலபலவா
மாண்சிறந்த வாயுதங்கண் மற்று.        11.11

பலபலவாம் கண்முகங்கள்

பலபலவான கண்களையும் முகங்களையும்

பண்பு ஆர் வியப்பு பலபலவாம் பார்க்கும் பரிசு

எல்லையற்ற பெருமைபெற்ற ஆஶ்சர்யமான காட்சியையும்

பலபலவாம் பூண் சிறந்த வான்கலங்கள்

அப்ராக்ருதமாய், அணிவதற்குச் சிறந்த பல பல ஆபரணங்களையும்

மற்று

மேலும்

போற்றிப் பலபலவாம் மாண் சிறந்த ஆயுதங்கள்

போற்றத்தக்கவையாய் பலபலவான சிறந்த மாட்சிமைபெற்ற ஆயுதங்களையும்

மாலை பரியட்டம் மன்னுமவை திவ்வியமாய்

அப்ராக்ருதமாய் விளங்கும் மாலைகளையும் வஸ்த்ரங்களையும்

கோல நறும் பூச்சதின் கோளுடைத்தாய்

அழகிய மணம்மிக்க பூச்சுக்களும் ஆகிய இவற்றைக்கொண்டதாய்

மேலான ஆச்சரியம் எல்லாம் அமர்ந்தே

மேலான ஆஶ்சர்யமுடைய பொருள்கள் அனைத்துக்கும் இருப்பிடமாய்

அனந்தமாய்

தேஶத்தாலும் காலத்தாலும் அளவுபடாததாய்

ஓச்சம் மிகும் எம்முகமும் உற்று

எல்லா திசைகளிலும் முகங்களையுடையதுமான (விஶ்வரூபத்தைக் காட்டினான்)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top