Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்த வுயிரரசு போகங்க ளாலெமக்கென்
அந்தவவை யாவர்க்கா வத்தித்தோ – நந்தமரா
மங்கவர்க ளெலலா மமர்த்தலையி லேநின்றார்
தங்களுயிர் வித்தந் தவிர்ந்து.    1.26

இந்த உயிர் அரசு போகங்களால்

இந்த உயிர்களாலும், ராஜ்யத்தாலும், போகங்களாலும் எமக்கு என்ன பயன்?

அந்த அவை

அந்த உயிர் அரசு போகங்களை.

யாவர்க்கா அ(ர்)த்தித்தோம்

எவர்களுக்காக லிரும்பினோமோ,

நம் தமராம் அவர்கள் எல்லாம்

நம் உறவினரான அவர்கள் அனைவரும்.

தங்கள்

தங்களுடைய,

உயிர்

உயிர்களையும்.

வித்தம்

செல்வங்களையும்

தவிர்ந்து

கைவிட்டவர்களாய்

அங்கு அமர் தலையிலே நின்றார்

முன்னே போர் முனையில் நிற்கிறார்கள்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top