Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வேகப் படைநடைப்பி லெல்லாம் வியந்துமது 
பாகத்தை நீங்காது பாட்டனையே-யேகமா 
யாங்கமர்ந்து சூழ்ந்தே யமர்முகத்து நோக்குங்கோள் 
பாங்கமர்ந்து நீங்கள் பலர்.    1.9

நீங்கள் பலர்

பலராயிருக்கும் நீங்கள்

வேக படை நடப்பில் எல்லாம் வியந்து

வேகமாகப் படையை நடத்துவதில் எல்லாவகையிலும் சிறந்து நின்று

உமது பாகத்தை நீங்காது

(போர்க்களத்தில்) உங்கள் பகுதிகளைக் கைவிடாமல்

ஏகமாய் ஆங்கு அமர்ந்து

ஒருமுகமாய்ப் போர்க்களத்தில் நின்று

சூழ்ந்து

சூழ்ந்திருந்து

பாட்டனையே

பிதாமஹரான பீஷ்மரையே

அமர்முகத்து

போர்முனையிலே

பாங்கு அமர்ந்து

பக்கத்தில் இருந்து

நோக்குங்கோள்

காப்பாற்றுங்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top