Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மின்னுநூல் வேதியனே வெற்றியரை யானுரைக்கேன்
முன்னுநீ பாட்டன் முயல்கன்னன் – முன்னங்
கிருபனச்வத் தாமா விகன்னனுடன் கேளிர்
நிருபர் பலரு நிறைந்து.     1.6

மின்னு நூல் வேதியனே

பூணூல் விளங்கப்பெற்ற அந்தணனே!

வெற்றியரை

(நம் சேனையிலுள்ள) வெற்றிவீரர்களை

யான் உரைக்கேன்

நான் உரைக்கின்றேன்

முன்னும் நீ

(வீரத்தில்) முந்திநிற்கும் நீயும்

பாட்டன்

பிதாமஹரான பீஷ்மரும்

முயல்கன்னன்

முயற்சியையுடைய கர்ணனும்

முன்னம் கிருபன்

முன்னணியில் நிற்கும் கிருபன்

அச்வத்தாமா

(துரோணபுத்திரனான) அச்வத்தாமாவும்

விகன்னனுடன்

தம்பி விகர்ணனோடுகூட

கேளிர் நிருபர் பலரும்

உறவினரும் அரசரும் பலரும்

நிறைந்து

நிறைந்துள்ளனர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top