Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மற்றும் பலவரசர் மாரதராய் நிற்கின்றார்
முற்று மபிமனுடன் முந்துற்றுப்-பற்றி
யமர்முயற்றி சேர்வ ரதுநிற்க கேளாய்
நமர் முயற்றி தன்னை நயந்து .   1.5

வீமன் விசயன் என

பீமனையும் அர்ஜுனனையும் போலே!

வென்றி அமர் வில்லாளர்

வெற்றிபொருந்திய வில்லாளிகள்

நன்றியமர் தன்னுள் நலம் புனைவோர்

நல்ல போரிலே வீரத்தைக் காட்டவிருக்கிறார்கள்

நின்று இகல்வோன்

நிலை நின்று போர்புரிபவன் (யுயுதானன்) என்னும் பெயருடைய ஸாத்யகியும்

வெல்லும் விராடன்

வெற்றியேகாணும் விராடனும்

மிகுதேரான் பாஞ்சாலன்

சிறந்த தேராளியான பாஞ்சாலவரசனும் (உளர்)

தொகை சொல்லும் அளவோ?

அவர்களுடைய எண்ணிக்கை சொல்லக்கூடிய அளவோ

மற்றும் பல அரசர் மாரதராய் நிற்கின்றார்

மற்றும் பல அரசர்கள் மஹாரதர்களாயுள்ளனர்

முற்றும் அபிமனுடன்

வலிமை முற்றுகிற அபிமன்யுவுடன்

முந்துற்று பற்றி அமர் முயற்றி சேர்வர்

முன்னிடம்தேடி போர்க்களத்தின் முன்னணியை அடைவர்

அதுநிற்க

அது இருக்கட்டும்

நமர் முயற்றிதனை

நம்முடைய முன்னணியை

நயந்து கேளாய்

விரும்பிக் கேட்பீராக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top